நிர்வாக குழுவின் சாதனைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்
S.No | Details |
---|---|
1. |
வங்கியில் கணிணி சேவையை அமல்படுத்தப்பட்டு அடுத்த பிரிவிற்கு செல்லப்படுகிறது. |
2. |
வங்கியின் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது |
3. |
வாடிக்கையாளரின் சேவையை எளிமை ஆக்கவும் மற்றும் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட இரண்டு நவீன பணம் எண்ணும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. |
4. |
வங்கியில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் அதற்கு எதிராக போடப்பட்ட அபராத தொகை ரூ6,60,000/- வங்கிக்கு திரும்ப பெறப்பட்டு இலாபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. |
5. |
வங்கியில் நிலுவையில் உள்ள வாராக்கடன் ரூ3,17,453/- வசூல் செய்யப்பட்டு இலாபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. |
6. |
வங்கியின் சேவையில் தடைபடாமல் இருக்க விரைவாக மேற்கொள்ள புதிய இன்வெர்டர் பொருத்தப்பட்டு மின்சார சேவை தடைபெறாமல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. |
7. |
உறுப்பினர் குறைந்து வருவதால் எதிர்கால திட்டம் மற்றும் வளர்ச்சிக்காக புதிய இணை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். |
8. |
உறுப்பினர்களுக்கு புதிய கடன் களான கல்வி கடன், வாகனக் கடன் மற்றும் பண்டிகை கடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது |
9. |
புதிய கடன் களுக்கு குறைந்த வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது |
10. |
இரண்டு ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்த தினசரி நாட்காட்டி மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது புதிய அனைத்து விபரங்களும் அடங்கிய மாதாந்திர காலண்டர் வழங்கப்பட்டுள்ளது. |
11. |
வங்கியின் சேவையை உறுப்பினர்களுக்கு எளிதாக்க வங்கியைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வலையகம் / வலைதளம் (வெப்சைட்) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது |
12. |
வங்கியின் பாதுகாப்பிற்காக 100% நகை இருப்பு பரிசோதனை கூட்டுறவுத்துறை அதிகாரி மூலம் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
13. |
வங்கியின் வளர்ச்சிக்காக புதிய அரசு சார்ந்த புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது |
14. |
தனிநபர் கடன் வட்டி 11.50% லிருந்து 10.75% ஆக குறைக்கப்பட்டதால் உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.9,03,599/- சலுகை அளிக்கப்பட்டுள்ளது. |
15. |
நகைக்கடன் வட்டி 8.50% லிருந்து 7.75% ஆக குறைக்கப்பட்டதால் உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ4,48,078/- சலுகை அளிக்கப்பட்டுள்ளது |
16. |
தனிநபர் கடன் பெற உரிய ஆவணங்கள் பெறப்பட்டு உடனடியாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. |
17. |
உறுப்பினர்களுக்கு நகைக்கடன் குறைந்த நேரத்தில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது |
18. |
ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. |
19. |
உறுப்பினர்கள் பெறும் நபர் ஜாமீன் கடனுக்கு காப்பீடு வசதி அமுல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. |
20. |
ஓய்வு பெற்ற மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு நெய் வழங்கப்பட்டுள்ளது. |
21. |
வங்கியின் வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறவும் புதிய ஆலோசனைப் பெட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. |
22. |
தொடர் வைப்புகளுக்கு மற்றும் நிரந்தர வைப்புகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.. |
23. |
உறுப்பினர் சேவையை எளிதில் தெரிந்துகொள்ள சிறப்பு எலக்ட்ரானிக் போர்டு மற்றும் டோக்கன் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. |
24. |
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வங்கி உறுப்பினருக்கு பாதுகாப்பிற்காக ஆட்டோமேட்டிக் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது |
25. |
நிரந்தர வைப்பு பத்திரம் ,சேமிப்பு கணக்கு புத்தகம் கணிணியின் மூலம் பதிந்து வழங்கப்பட்டு வருகிறது. |
26. |
நகைக்கடன் ரசீது, நகைக்கடன் குறிப்பேடு கணிணியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. |
27. |
நவீன மயமாக்குதல் தொடர்பில் இதற்கான புள்ளி விபரங்கள் அளிக்கப்பட்டு அரசின் அனுமதி இணைக்கப்பெற்றவுடன் அமுல்படுத்தப்படும். |
28. |
வங்கியின் உறுப்பினர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆர்.ஓ குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. |
29. |
உறுப்பினர்கள் 20 பேர் அமரக்கூடிய புதிய சோபா செட் வசதி செய்யப்பட்டுள்ளது.. |